பண்ணைக் குட்டைகள்

பண்ணைக் குட்டைகள்

பண்ணைக்

பண்ணைக்

குட்டைகள்

குட்டைகள்

அர்ஜுன் பண்ணை குட்டைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தமிழகத்தில் மிக அதிக இடங்களில் விவசாய பூமிகளில் (Water Table) பூமிக்கு அடியில் உள்ள தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே செல்வதால், எந்த கிணற்றிலும் இப்பொழுது தண்ணீர் இல்லை.

2. இந்த சூழ்நிலையில் அனைத்து விவசாயிகளும் போர் போட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் நிலையில் உள்ளனர்.

3. போர் மோட்டாரில் இருந்து/ கம்ப்ரஸரில் இருந்து வெளியேறும் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பதால் அதை நேரடியாக விவசாயத்திற்கு பாய்ச்ச இயலாது.

4. எனவே விவசாயிகள் போர் மோட்டார் மற்றும் கம்பரசர் இல் இருந்து வெளியேறும் தண்ணீரை வறண்ட கிணற்றிலேயே விட்டு , பிறகு அதிலிருந்து பம்ப்செட் மோட்டாரில் தண்ணீர் எடுத்து வாய்க்கால் மூலமாகவோ அல்லது சொட்டு நீர் பாசனம் மூலமாகவோ, தென்னை மரங்களுக்கும், பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர் .

5. ஆனால், 8 மணி நேரம் போர் மோட்டர் ஓடினால் அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிணற்றுக்குள் விடப்பட்டால் , சுமார் எட்டு அல்லது பத்து மணி நேரம் கழித்து , பார்த்தால் அதில் சுமார் 40 ஆயிரம் மீட்டர் லிட்டர் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கும். அதுவும் ஒன்று அல்லது இரண்டு நாள் நீர் எடுக்காமல் விட்டால் அந்த மீதமுள்ள தண்ணீரும் பூமிக்குள் உறிஞ்சப்பட்டு மறுபடியும் கிணறு தண்ணீர் இல்லாமல் காலியாக இருக்கும்.

6. இதற்காகத்தான், தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு, கிணற்றின் அருகில் தரை மேல் பண்ணை குட்டை அமைக்கலாம்.

7. அர்ஜுன் தார்பாலின் பிளாஸ்டிக் தார்ப்பாலின் பண்ணை குட்டை, இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் தார்ப்பாலின் ஆகும் .

8. பண்ணை குட்டை அமைப்பது மிகவும் எளிதானது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நீங்கள் செவ்வகமாக பறிக்கலாம். அவ்வாறு குழி பறிக்கும் பொழுது , ஒரு கோயில் தெப்பக்குளம் போல் நான்கு பக்கமும் சரிவாக கீழே உள்ள அளவுக்கு மேலே உள்ள அளவு அதிகமாக உள்ளவாறு அகன்று பறிக்க வேண்டும். ( படத்தில் காண்பித்துள்ளதுபோல்). நீங்கள் நான்கு அடி ஆழத்திற்கு குழி பறித்து அந்த எடுத்த மணலையே மேற்புறம் நான்கு புறமும் அடுக்கினால் , உங்களுக்கு ஏறக்குறைய ஆறு அடி ஆழமுள்ள பண்ணை குட்டை கிடைக்கும்.

9. அல்லது தரை மேல் பண்ணை குட்டை அமைக்க வேண்டும் என்றால் நமது தோட்டத்தில் உள்ள மண்ணோ அல்லது வெளியில் வாங்கிய மண் கொண்டு நான்கு புறமும் தலைக்கு மேல் 6 முதல் 8 அடி வரை மண்ணை கொட்டி, அதற்கு மேல் தண்ணீரை சேமிக்கலாம். இந்த அமைப்பில் குழி பறிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்யும் பொழுது தரைமேல் அந்த கரைக்குள் ஒரு பிவிசி பைப்பை பதித்து விட்டு அதில் ஒரு "கேட் வால்வு" fix செய்துவிட்டால், தண்ணீர் மின்சாரம் இல்லாத பொழுதும், தானாகவே வெளியேறிவிடும். இது மின்சாரத்தையும் சேமிக்கும்.

உதாரணமாக 21 அடி நீளம் 21 அடி அகலம் 6 அடி உயரம் உள்ள பண்ணை குட்டையின் கொள்ளளவு 74 , 926 லிட்டர் ( (எழுபத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஆறு லிட்டர்)ஆகும். 45 அடி நீளம் x 45 அடி அகலம் x 9 அடி உயரம் உள்ள பண்ணை குட்டையின் கொள்ளளவு 5,16,075 லிட்டர்.( ஐந்து லட்சத்து பதிணாராயிரத்து எழுபத்து ஐந்து லிட்டர். ஆகும். ஆகவே மிகச் சுலபமாக பண்ணை குட்டையின் கொள்ளளவு தெரிந்து கொள்வதற்கு அதன் நீளம் பெருக்கல் அகலம் பெருக்கல் உயரம், கணக்கிடும்பொழுது வருவது மொத்த கன அடி. ஒரு கன அடிக்கு 28.31 லிட்டர் தண்ணீர் கொள்ளும். எனவே அதற்கு ஏற்றவாறு நீங்கள் கணக்கிட்டு உங்கள் கொள்ளளவை முடிவு செய்து கொள்ளவும்.

வட்டமான பண்ணை குட்டைகளுக்கு 22/7 X ஆரம் x ஆரம் X உயரம் , என்ற என்ற சூத்திரத்தில் கணக்கு போட்டு வரும் மொத்த கன அடியில் 28.31 மூலம் பெருக்கினால் வருவது கொள்ளளவு லிட்டர்.

பண்ணை குட்டைகளை அளக்கும் முறை;

பண்ணை குட்டைகள் அளக்கும் போது கட்டாயம் பெரிய டேப் எடுத்துக்கொண்டு தரைமேல் டேப்பை பதித்து தான் அளக்க வேண்டும் . தரைக்கு மேல் இரண்டு புறமும் குறைந்த அளவு 3 அடி இருக்குமாறு வைத்து தான் அளக்க வேண்டும். A +,B + C +.D + E அனைத்தையும் கூட்டினால் வருவதுதான் கிழக்கு மேற்கு அளவு. இதேபோல் J+K+L+M+N கூட்டினால் வருவது வடக்கு தெற்கு பக்க அளவு. பண்ணைக்குட்டைக்காண தார்ப்பாலின் வாங்கும் பொழுது இந்த மொத்த அளவில் நீளம் மற்றும் அகலம் மட்டும்தான் கொடுக்க வேண்டும்.

10. பண்ணை குட்டை தார்ப்பாலின் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

நீங்கள் கொடுக்கும் அளவில் இருந்து நீங்கள் வாங்கும் தார்ப்பாலின் அளவு கொஞ்சம் குறையும். நாங்கள் ஆறடி கொண்ட தார்பாலின் ரோல், அதை ஒவ்வொன்றாக ஒட்டும் பொழுது அந்த ஜாயிண்ட் ரெண்டு இன்ச் எடுத்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் ஓரத்தில் மடித்து கயிறு வைத்து வலை போடும் பொழுது ஒரு சைடுக்கு 2 inch குறையும். ஆகவே நீளத்தில் எப்பொழுதும் 30 அடிக்கு உள்ளான நீளத்தில் அரை அடியும், 50 அடிக்கு மேல் உள்ள தார்ப்பாயில் நீளத்தில் ஒரு அடி குறையும். நூறு அடி நீளத்தில் இரண்டு அடி குறையும். 150 அடிக்கு தார்ப்பாய் வாங்கினால் அதில் நீளத்தில் மூன்று அடி குறையும். ஆகவே அதற்கு ஏற்றவாறு சொல்லி ஆர்டர் செய்யவும்.

அகலத்தின் ஒவ்வொரு ஆறடிக்கும் இரண்டு இன்ச் ஜாயிண்ட்/ இணைப்பு உள்ளதால் ஒவ்வொரு ஆறடிக்கும் 2 இன்ச் குறையும் மற்றும் இடது பக்கம் வலது பக்கம் உள்ள இணைப்பு ஹெம்மிங் அதில் ஒரு நாலு இன்ச் குறையும். ஆகவே நீங்கள் ஆர்டர் செய்யும் பொழுது இறுதி அளவு உங்களுக்கு எவ்வளவு கட்டாயம் வேண்டும் என்று தெளிவாக கூறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அதற்கு பிறகு நீளத்தில் கொஞ்சம் அகலத்தில் கொஞ்சம் சைஸ் பெரிதாக புக் பண்ணினால் மட்டும்தான் உங்களுக்கு உங்களுக்கு தேவையான இறுதி அளவு கிடைக்கும். இது அனைத்து தார்ப்பாலின்களுக்கும் பொருந்தும் .

அர்ஜுன் தார்ப்பாலின் பண்ணை குட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டவை. இவை சரியான மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை . இவற்றில் பழைய பால்பை, கேரி பேக் ,சுண்ணாம்பு போன்ற குறைந்த விலை மூலப் பொருட்களை கலப்படம் செய்வதில்லை. அது மட்டுமல்லாமல் சூரிய வெப்பத்தில் தாங்கக்கூடிய அளவிற்கு தேவையான பிரத்தியேகமான (UV Stabilizer) யுவி ஸ்டெபிலைசர் என்ற மூலப்பொருள் மிக அதிக அளவில் சேர்க்கப்படுவதால் அர்ஜுன் தார்ப்பாலின் அதிக நாள் சூரிய வெப்பத்திற்கு கீழ் உழைக்கும்.

வெளிச்சந்தையில் ஒரு சில டிரேடர்ஸ் / பொருட்களை வாங்கி விற்கும் கடைக்காரர்கள் கலப்படம் மிகுந்த தார்ப்பாலின்களை வாங்கி விற்க வாய்ப்புகள் உள்ளது. இவை குறைந்த நாட்களிலேயே சாயம் போய்விடும் மற்றும் உதிர்ந்து விடும். ஆகவே கலப்படம் இல்லாத நல்ல பிளாஸ்டிக் தார்பாலின் யுவி ஸ்டெபிலைசர் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து பிறகு தான் தார்ப்பாலின்கள் வாங்க வேண்டும்.

GSM or GSF: சரியான தேர்வு:

  • அர்ஜுன் தார்பாலின்கள் மிக சரியான மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு சூரிய வெப்பத்தை தாங்க கூடிய அளவிற்கு அதிக அளவில் UV ஸ்டெபிலைசர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இவை சூரிய வெப்பத்தினால் பாதிப்புக்கு உள்ளாகாமல் நீண்ட நாள் உழைக்கும். இதில் 160 GSM தார்ப்பாலின் போடலாம். 200 GSM மிக அதிகமாக போடப்படுகிறது. மிகவும் நீண்ட நாட்கள் வருடங்கள் உழைக்க வேண்டும் என்றால் 250 GSM போடலாம்.
  • பொதுவாகவே கருப்பு நிறம் கொண்ட தார்பாய்கள் மற்ற நிறங்களில் உள்ள தார்ப்பாய்களை விட சில மாதங்கள் கூடவே உழைக்கிறது . எனவே தங்களது பட்ஜெட்க்கு ஏற்றவாறு தார்பாலின்களை தேர்வு செய்து கொள்ளவும். அதிக ஜிஎஸ்எம் உள்ள தார்பாய்கள் அதிக வருடங்கள் உழைக்கும்.இந்த ஏற்பாடுகள் தார்ப்பாலின் நீண்ட நாட்கள் உழைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.தார்ப்பாலின்கள் நீங்களாகவே விரித்துக் கொள்ள வேண்டும்.

பண்ணைக் குட்டை தார்ப்பாய்கள் பராமரிக்கும் முறைகள்:

1. குட்டை தோண்டி முடித்த பொழுது, ஏற்கனவே கூறியபடி நான்கு புறமும் சரிவாக உள்ளவாறு அமைப்பது மிகவும் நல்லது. மண் சரியாமல் இருக்கும்.

2. முடிந்து வரை தேங்காய் நார், எம் சேண்டு போன்றவற்றை போட்டு தரையை கூரான கற்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு நன்றாக திம்ஸ் கட்டை போட்டு மெத்தி விடவும் .இல்லை என்றால் பழைய விளம்பரம் பிளக்ஸ் தார்ப்பாய்கள் போன்றவற்றை விரித்துக் கொள்ளலாம். (இவை மார்க்கெட்டில் இரண்டு ரூபாய் சதுர அடிக்கு கிடைக்கிறது ).முதலில் கரைக்கு மேல் வைத்து நீல அகலம் சரியாக செக் செய்து பிறகு அப்படியே இறக்கிவிடலாம்.பண்ணைக்குட்டை தார்பாலின்களுக்கு வளையம் தேவையில்லை .முடிந்தவரை குச்சி கொண்டு வளையத்தில் மேலே கட்ட வேண்டாம்.

வெளியே உள்ள முனைகளை சிறிதளவு நான்கு இன்ச் குழி பறித்து அதில் முனைகளை பதித்து காற்று உள்பக்கம் போகாதவாறு மற்றும் காற்றில் பறக்காதவாறு அமைக்க வேண்டும்.

மிக முக்கியமாக தரை மேல் இருக்கும் தார்பாய்களை பண்ணை குட்டை முழுமையாக தண்ணீர் நிரம்பும் வரைக்கும் மண்ணுக்கடியில் தார்பாய்களை பதிக்கவே கூடாது. பண்ணை குட்டை வெட்டும் பொழுது சைடுல அங்கங்கே குழிகள் இருக்கும். தண்ணீர் நிரம்பும் போது அது குழிகளுக்கு உள்ளே போய் தார்ப்பாய்கள் வெளிவருவதால் தண்ணீர் நிரம்ப நிரம்ப மேலே உள்ள தார்ப்பாயை கீழே இழுக்கும். அதனால் நீண்ட நாள் கழித்து தார்பாலின்கள் நீளவாக்கில் கிழிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே மேலே உள்ள எக்ஸ்ட்ரா தார்பாய்களை கொஞ்சம் லூசாக வைத்து பிறகு மண்ணில் பதித்துக் கொள்ளவும். shade Net, நிழல் வலை போன்றவற்றை உபயோகப்படுத்தி தரை மேல் இருக்கும் தார்பாய்களை பாதுகாத்துக் கொண்டால் இன்னும் நீண்ட வருடங்கள் உழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெப்பத்தின் அளவு மாறுபடுகிறது. திருச்சி , வேலூர், சென்னை போன்ற ஊர்களில் அதிக அளவு வெப்பம் உள்ளது.

அதேபோல் கோத்தகிரி , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பண்ணைக்குட்டை தோண்டும் பொழுது சரளை மண், களிமண், பாறைகளும் அதிகமாக உள்ளது. பாறைகள் அதிகமாக உள்ள இடத்தில் பண்ணை குட்டைகள் போட்டால் அது காயப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் மாடுகள் மேலே நடக்கிறது. சில இடங்களில் நாய்கள் கடிக்கிறது. சில இடங்களில் கோரை கீழிருந்து முளைக்கிறது. இது போன்ற விஷயங்கள் இருப்பதால் பண்ணை குட்டை தார்ப்பாலின்களுக்கு நாங்கள் எந்த விதமான உத்தரவாதமும் தருவதில்லை. ஆனால் இவைகள் 3 முதல் 9 வருடம் வரை நன்றாக உழைக்கின்றன. அவர் அவர்கள் அதிக கவனம் செலுத்தி பராமரித்து வந்தால் நீண்ட வருடங்கள் உழைக்கும்.

( பண்ணை குட்டைமுழுவதும் நிழல் வலை போட்டால் பாசம் பிடிக்காது).

இதைத் தவிர உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் ! நன்றி வணக்கம்!